தமிழக செய்திகள்

மீண்டும் ரூ.15 ஆயிரத்தை நெருங்கும் ஒரு கிராம் தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன...?

வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை.

சென்னை,

தங்கம் விலை கடந்த ஓரிரு நாட்களாக ஏற்றமும், இறக்கமுமாக இருந்து வருகிறது. நேற்று சென்னையில் தங்கத்தின் விலை மாற்றமின்றி ஒரு சவரன் ரூ.1,18,000க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10-ம், கிலோவுக்கு ரூ.10 ஆயிரமும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.300-க்கும், ஒரு கிலோ ரூ.3 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சற்று உயர்ந்துள்ளது. அதன்படி, தங்கம் கிராமுக்கு ரூ.120 அதிகரித்து ஒரு கிராம் ரூ.14.870-க்கும், சவரனுக்கு ரூ.960 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1.18.960-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதன்மூலம் ஒருகிராம் தங்கம் விலை மீண்டும் 15 ஆயிரத்தை நெருங்குகிறது. இதனால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதைபோல வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. அதன்படி, ஒரு கிராம் வெள்ளி ரூ.300-க்கும், ஒரு கிலோ ரூ.3 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.