கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

தங்கம் விலை சற்று உயர்வு... இன்றைய நிலவரம் என்ன..?

நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்த நிலையில் இன்று சற்று அதிகரித்துள்ளது.

சென்னை,

கடந்த ஒரு மாதமாக தங்கம் விலை கிடுகிடுவென அதிகரித்து ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை கடந்தது. நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு எட்டாக் கனியாகிவிடும் என்று நினைக்கத் தோன்றும் அளவுக்கு தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்தது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்தது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று அதிகரித்துள்ளது.

அதன்படி சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.360 அதிகரித்து ரூ.54,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் கிராமுக்கு ரூ.45 அதிகரித்து ரூ.6,755-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.88-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

SCROLL FOR NEXT