தமிழக செய்திகள்

16 நாட்களுக்கு பிறகு உயர்ந்த தங்கம் விலை..! இன்றைய நிலவரம் என்ன..?

வெள்ளி விலையில் இன்று மாற்றமின்றி விற்பனையாகி வருகிறது.

சென்னை,

தங்கம் விலை கடந்த 10-ந்தேதியில் இருந்து மளமளவென சரிந்து வருவதை பார்க்க முடிந்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் உச்சம் தொட்டிருந்த நிலையில், அதற்கு பிறகு ஏற்ற-இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது.

இறங்குமுகத்தில் தங்கம் விலை

தொடர்ந்து விலை குறைந்து ஒரு சவரன் ரூ.1 லட்சத்துக்கு கீழ் வரும் என கடந்த செப்டம்பர் மாத இறுதியில் இருந்து பேசப்பட்டது. எப்போது வேண்டுமானாலும் விலை குறையும் என பல நிபுணர்களால் அவ்வப்போது சொல்லப்பட்டு கொண்டே இருந்தது. அந்த வகையில் இந்த மாதம் தொடக்கத்தில் விலை ஏற்ற-இறக்கத்துடன் பயணத்தை தொடங்கினாலும், கடந்த 10-ந்தேதியில் இருந்து தங்கம் விலையில் தொடர்ந்து இறங்குமுகமே காணப்பட்டது.

ஒரே நாளில் அதிரடி சரிவு

அப்படியாக கடந்த 18-ந்தேதி முதல் பெருமளவில் சரிவை சந்தித்து வருகிறது. கடந்த 18-ந்தேதி சவரனுக்கு ரூ.2,040-ம், கடந்த 19ம் தேதி ரூ.1,880-ம் குறைந்தது. 20ம் தேதி சவரனுக்கு ரூ.3,760-ம், கிராமுக்கு ரூ.470-ம் குறைந்ததும். இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.91,720-க்கும், கிராமுக்கு ரூ.45 குறைந்து, ஒரு கிராம் ரூ.11,465-க்கும் விற்பனையானது.

இன்றைய தங்கம், வெள்ளி விலை

கடந்த 16 நாட்களில் ரூ.15,360 குறைந்த தங்கம் விலை இன்று திடீரென உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.1080 உயர்ந்து ஒரு சவரன் ரூ.92,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.135 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,600-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலையில் இன்று மாற்றமின்றி விற்பனையாகி வருகிறது. அதன்படி வெள்ளி ஒரு கிராம் ரூ.175-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

SCROLL FOR NEXT