தமிழக செய்திகள்

தங்கம் விலை சற்று உயர்வு.. இன்றைய நிலவரம் என்ன.?

வெள்ளியின் விலையில் மாற்றமில்லை

சென்னை,

தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே உயர்ந்து வருகிறது. நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 400 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,14,160-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.50 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,270-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கம் விலை

இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 160 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,14,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.20 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,290-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. அதன்படி வெள்ளி ஒரு கிராம் ரூ.255-க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.