தமிழக அரசு 
தமிழக செய்திகள்

சென்னையில் உள்ள 4 அரசு மருத்துவமனைகளில் தங்க மோதிரம் திட்டம் நாளை தொடக்கம்

தினமும் 200 முதல் 300 வரை குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் பணி தொடர்ந்து நடைபெற உள்ளது.

சென்னை,

சென்னையில் உள்ள 4 அரசு மருத்துவமனைகளில் 22.06.2026 முதல் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் திட்டம் நாளை தொடக்கம். இது தொடர்பாக, மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

முதல்-அமைச்சர்

தமிழ்நாடு முதல்-அமைச்சர் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தினை நாளை மதுரையில் தொடங்கி வைப்பதை தொடர்ந்து, நாளை சென்னை மாவட்டத்தில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 4 அரசு மருத்துவமனைகளில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் 22.06.2026 முதல் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு முதல்-அமைச்சர் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தினை நாளை மதுரையில் தொடங்கி வைப்பதை தொடர்ந்து, நாளை சென்னை மாவட்டத்தில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 4 அரசு மருத்துவமனைகளில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் 22.06.2026 முதல் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்படுகிறது.

நான்கு மருத்துவமனைகள்

சென்னை மாநகராட்சியில் 22.06.2026 முதல் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஆர்.எஸ்.ஆர்.எம் மகப்பேறு மருத்துவமனை, எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனை, திருவல்லிக்கேணி கஸ்தூரிபா காந்தி மருத்துவமனை ஆகிய நான்கு மருத்துவமனைகளில் நாளை தொடங்கி வைக்கப்படுகிறது.

கிராம் தங்க மோதிரம்

இத்திட்டத்தின் கீழ் 22.06.2026 அன்று முதல் அரசு மருத்துவமனைகள், மற்றும் சென்னை மாநகராட்சியின் 16 நகர்ப்புற சமுதாய சுகாதார மையங்கள் மற்றும் 3 மகப்பேறு மருத்துவமனைகளில் பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது.

200 முதல் 300 வரை குழந்தைகள்

தினமும் 200 முதல் 300 வரை குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் பணி தொடர்ந்து நடைபெற உள்ளது. 22.06.2026 முதல் 27.06.2026 வரை பிறந்த குழந்தைகள் அனைவருக்கும் அக்டோபர் இறுதிக்குள் தங்க மோதிரம் வழங்கப்பட அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அழைப்பிதழ்கள் வழங்கப்படும்

இது தொடர்பாக மேற்கண்ட கால கட்டத்தில் பிறந்த குழந்தைகளின் தாய்மார்களுக்கு தங்க மோதிரம் பெற்றுக் கொள்ள அழைப்பிதழ்கள் வழங்கப்படும். அழைப்பிதழில் குறிப்பிட்டுள்ள நாளில் குறிப்பிட்டுள்ள மருத்துவமனையில் வைத்து தங்க மோதிரம் வழங்கப்படும். 28.06.2026 முதல் பிறக்கும் குழந்தைக்கு அந்தந்த மருத்துவமனைகளிலேயே தங்க மோதிரம் வழங்கப்படும். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT