தமிழக செய்திகள்

திருச்சி விமான நிலையத்தில் ரூ.1.31 கோடி தங்கம் பறிமுதல்

உள்ளாடையில் மறைத்து தைத்திருந்த 591.5 கிராம் 24 காரட் தங்கக்கலவை கண்டுபிடிக்கப்பட்டது.

திருச்சி,

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சுங்கத்துறை விமானப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில், 2 வெவ்வேறு சம்பவங்களில் பயணிகளிடம் இருந்து ரூ.1 கோடியே 31 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

சோதனை

சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த 2 ஆண் பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் இடைமறித்து சோதனை செய்தனர். அப்போது, அவர்கள் உள்ளாடையில் மறைத்து தைத்திருந்த 591.5 கிராம் 24 காரட் தங்கக்கலவை கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.90.3 லட்சம் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.

பறிமுதல்

இதேபோல், கடந்த 22-ந் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் இருந்து திருச்சி வந்த பயணி ஒருவரை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, அவரது சட்டையின் பொத்தான்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 240 கிராம் 24 காரட் தங்கமும், கைப்பையில் மறைத்து வைத்திருந்த 25.5 கிராம் 22 காரட் தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.41 லட்சம் என கூறப்படுகிறது. இந்த 2 சம்பவங்கள் தொடர்பாகவும் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT