தமிழக செய்திகள்

தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீரர் சுமித் அன்டிலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீரர் சுமித் அன்டிலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாராஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் இந்தியா சார்பில் 54 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். போட்டித் தொடரின் 7-வது நாளான இன்று, டோக்கியோ பாராலிம்பிக்ஸ் போட்டியில் ஈட்டி எறிதலில் இந்தியாவின் சுமித் அன்டில் உலக சாதனையுடன் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

தங்க பதக்கம் வென்றுள்ள சுமித் அண்டிலுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில், தங்க பதக்கம் வென்ற சுமித் அன்டிலுக்கு தமிழக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் வழ்த்து தெரிவித்துள்ளார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்