சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
சென்னை எழும்பூர் - திருச்செந்தூர் இடையே இயக்கப்படும் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வண்டி எண்கள் 20605/20606) கூடுதலாக 1 குளிர்சாதன 2-ம் வகுப்பு பெட்டி, 2 குளிர்சாதன 3-ம் வகுப்பு பெட்டி, 2 படுக்கை வசதி பெட்டிகள் என மொத்தம் 5 பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. இந்த நடைமுறை, சென்னையில் இருந்து வரும் 15-ந்தேதி முதலும், திருச்செந்தூரில் இருந்து 16-ந்தேதி முதலும் அமல்படுத்தப்படுகிறது.
கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்ட பிறகு செந்தூர் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலில் 1 குளிர்சாதன முதல் வகுப்பு பெட்டி, 2 குளிர்சாதன 2-ம் வகுப்பு பெட்டிகள், 3 குளிர்சாதன 3-ம் வகுப்பு பெட்டிகள், 11 படுக்கை வசதி பெட்டிகள், 4 முன்பதிவில்லாத 2-ம் வகுப்பு பெட்டிகள், 2 சரக்கு பெட்டிகள் என மொத்தம் 23 பெட்டிகள் இடம்பெற்றிருக்கும்.
இதேபோல், சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் இடையே இயக்கப்படும் சேது சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் (22661/22662) வரும் 15-ந்தேதி முதல் ராமேஸ்வரத்தில் இருந்தும், 16-ந்தேதி முதல் சென்னை எழும்பூரில் இருந்தும் மாற்றியமைக்கப்பட்ட பெட்டிகள் அமைப்போடு இயங்கும்.
அதாவது, இந்த ரெயிலில் 1 குளிர்சாதன முதல் வகுப்பு பெட்டி, 2 குளிர்சாதன 2-ம் வகுப்பு பெட்டிகள், 3 குளிர்சாதன 3-ம் வகுப்பு பெட்டிகள், 11 படுக்கை வசதி பெட்டிகள், 4 முன்பதிவில்லாத 2-ம் வகுப்பு பெட்டிகள், 2 சரக்கு பெட்டிகள் இடம்பெற்றிருக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.