சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
பயணிகளின் வசதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரல்- ஜோலார்பேட்டை இடையே இயக்கப்படும் ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் நாளை (3-ந் தேதி) முதல் புத்தம்புது எல்.எச்.பி. பெட்டிகள் இணைக்கப்படுகின்றன.
அதாவது, சென்னையில் இருந்து நாளை முதலும், ஜோலார்பேட்டையில் இருந்து நாளை மறுநாள் (4-ந் தேதி) முதலும் எல்.எச்.பி. பெட்டிகளில் ஏலகிரி எக்ஸ்பிரஸ் இயங்கும்.
இந்த ரெயிலில், ஒரு குளிர்சாதன இருக்கை வசதி பெட்டி, 19 2-ம் வகுப்பு பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.