தமிழக செய்திகள்

நாமக்கல்லுக்குசரக்கு ரெயிலில் 2,500 டன் மக்காச்சோளம் வந்தன

நாமக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் நூற்றுக்கணக்கான கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு வளர்க்கப்படும் கோழிகளுக்கு தேவையான தீவன மூலப்பொருட்கள் வடமாநிலங்களில் இருந்து சரக்கு ரெயில் மூலம் வாங்கி வரப்படுகின்றன.

அந்த வகையில் நேற்று பீகார் மாநிலத்தில் இருந்து 2,500 டன் மக்காச்சோளம் சரக்கு ரெயிலில் நாமக்கல் வாங்கி வரப்பட்டது. இந்த மக்காச்சேள மூட்டைகள் 90 லாரிகளில் ஏற்றி நாமக்கல் மட்டும் இன்றி சேலம், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டன.

SCROLL FOR NEXT