தமிழக செய்திகள்

நாமக்கல்லுக்கு சரக்கு ரெயிலில் 2,500 டன் கடுகு புண்ணாக்கு வந்தது

நாமக்கல் மண்டலத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு வளர்க்கப்படும் கோழிகளுக்கு தீவன மூலப்பொருட்கள் வடமாநிலங்களில் இருந்து சரக்கு ரெயிலில் வாங்கி வரப்படுகிறது. அந்த வகையில் நேற்று மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து 2,500 டன் கடுகு புண்ணாக்கு சரக்கு ரெயிலில் கொண்டு வரப்பட்டன.

இந்த மூட்டைகள் 110-க்கும் மேற்பட்ட லாரிகளில் ஏற்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டன.