தமிழக செய்திகள்

திண்டிவனம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து: எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தம்

சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் ரயில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன

சென்னையில் இருந்து திண்டிவனம் நோக்கி சரக்கு ரயில் ஒன்று வந்துகொண்டிருந்தது. விழுப்புரம் மாவட்டம் ஓலக்கூர் ரயில் நிலையம் அருகே வந்த போது திடீரென இந்த ரயில் தடம்புரண்டது. உடனடியாக இந்த ரயில் நிறுத்தப்பட்டுள்ளது. ரயில்வே ஊழியர்கள் தண்டாவளத்தில் இருந்து விலகிய பெட்டியை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளன.

இதற்கிடையே சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் ரயில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. எக்ஸ்பிரஸ் ரயில்கள் பல அப்படியே பாதி வழியில் நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

SCROLL FOR NEXT