தமிழக செய்திகள்

வந்தே பாரத் ரெயிலில் கேட்பாரற்று கிடந்த ரூ.1.30 லட்சம் பொருட்கள் மீட்பு

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு கோவையில் இருந்து வந்த வந்தே பாரத் ரெயிலில் கேட்பாரற்று கிடந்த ரூ.1.30 லட்சம் மதிப்புள்ள பொருட்களை அதன் உரிமையாளரிடம் ஆர்.பி.எப். போலீசார் ஒப்படைத்தனர்.

சென்னை,

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு கோவையில் இருந்து வந்த வந்தே பாரத் ரெயிலில் கேட்பாரற்று கிடந்த ரூ.1.30 லட்சம் மதிப்புள்ள பொருட்களை மீட்ட ஆர்.பி.எப். போலீசார் அதனை உரிய நபரிடம் ஒப்படைத்தனர்.

வந்தே பாரத் ரெயிலில் கேட்பாரற்று கிடந்த ரூ.1.30 லட்சம் பொருட்கள்

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு நேற்று முன்தினம் கோவையில் இருந்து வந்தே பாரத் ரெயில் ஒன்று வந்தது. இந்த ரெயிலில் பயணிகள் அனைவரும் இறங்கி சென்றதும் ஆர்.பி.எப். போலீசார் ஒவ்வொரு பெட்டிகளாக சென்று சோதனை செய்தனர். அப்போது ஒரு பெட்டியில் கேட்பாரற்று ஒரு பை கிடந்தது. அந்த பையை போலீசார் சோதனை செய்தபோது அதில் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் விலை உயர்ந்த செல்போனும் ரூ.10 ஆயிரம் பணமாகவும் இருந்தது. இதனை கைப்பற்றிய போலீசார், மீட்கப்பட்ட பொருளை தொலைத்த பயணியிடம் ஒப்படைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

உரிய நபரிடம் ஒப்படைப்பு

இதற்கிடையே தன் பையைத் தொலைத்துவிட்டு பதறியடித்துக்கொண்டு அந்த பயணி போலீசாரை அணுகினார். உடனே அதிகாரிகள் அந்த பயணியின் பயணச்சீட்டு உள்ளிட்ட விவரங்களை முழுமையாகச் சரிபார்த்து, அந்தப்பை அவருடையது தான் என்பதை உறுதிசெய்து பின்னர் அவரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.

SCROLL FOR NEXT