சென்னை,
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-
நம் திராவிட மாடல் ஆட்சியில் ரூ.290 கோடி மதிப்பில் கோவையில் கட்டியெழுப்பப்பட்டுள்ள பெரியார் அறிவுலகம் மற்றும் அறிவியல் மையம் இன்று திறக்கப்படுவதில் மகிழ்ச்சி கொள்கிறோம். இந்த மாபெரும் அறிவுச்சுரங்கத்தை கோவை வாழ் பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வாழ்த்துகிறோம்.
வழக்கமாக திமுக அரசின் திட்டங்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்பவர்கள், இந்த முறை பெரியார் அறிவுலகத்தில் ’நான் முதல்வன்’என்ற பெயரின் மீது ஸ்டிக்கர் ஒட்டி மறைத்து இருக்கிறார்கள். இந்த Cheap CM-இன் ஸ்டிக்கர் ஆட்சியில், நான் முதல்வன் திட்டத்தைச் சிதைத்ததோடு மட்டுமின்றி, அதன் பெயரைக்கூட ஏற்க மனமில்லை என்றால் என்ன காரணம்?.
‘முதல்வன்’ என்று சொன்னாலே மு.க.ஸ்டாலின் பெயர் தான் நினைவுக்கு வருகிறதா?.. இல்லை, நம் மாணவர்கள் அவரவர் துறையில் முதல்வர்கள் ஆவது பிடிக்கவில்லையா?. திமுக அரசு சூட்டிய பெயர்களை மறைப்பது - திட்டங்களை ரத்து செய்வது - ரத்து செய்தவற்றையே ரத்து செய்து யூ-டர்ன் அடிப்பது என்று சர்க்கஸ் நடத்தாமல் மக்கள் நலன் சார்ந்த ஆட்சியை இந்த டம்மி முதல்-அமைச்சர் நடத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.