தமிழக செய்திகள்

அரசு பேருந்து மோதி விபத்து: தாய், மகன் உயிரிழப்பு

கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த 3 பேர் மீது பயங்கரமாக மோதியது.

தேனி,

அரசு பேருந்து மோதிய விபத்தில் தாய், மகன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தாய், மகன் உயிரிழப்பு

தேனி மாவட்டம் போடி அருகே சிலமரத்துப்பட்டியில் உள்ள பேருந்து நிலையத்தில் ஊருக்கு செல்வதற்காக, சுமதி, அவரது கணவர் மணிவாசகம், மற்றும் மகன் விஜய் பிரவீன்(வயது 25) ஆகிய 3 பேரும் நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு அரசு பேருந்து ஒன்று அதிவேகமாக வந்தது. திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, அங்கு பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த சுமதி, அவரது கணவர் மற்றும் மகன் மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் சுமதி மற்றும் விஜய் பிரவீன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த மணி வாசகத்தை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். உயிரிழந்த இருவரின் சடலத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து பேருந்து ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT