நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அம்பாசமுத்திரம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள மாஞ்சோலை மலைப் பகுதிக்கு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் இயக்கப்பட்டு வரும் அரசு பேருந்து நிறுத்தப்பட்டுள்ளது.
தினமும் ஒரு முறை மட்டுமே மாஞ்சோலை மலை பகுதிக்கு இயக்கப்படும் பேருந்து நிறுத்தப்பட்டு உள்ளதால் அங்குள்ளவர்கள் அவதி அடைந்துள்ளனர். மேலும் வருவாய்த்துறையினர் விடுத்த அறிவுறுத்தலின் பேரில் அரசு பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும், எச்சரிக்கை நீக்கப்படும் வரை அரசு பேருந்து இயக்கம் நிறுத்தப்படுவதாகவும் போக்குவரத்து துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.