தமிழக செய்திகள்

அரசு கல்லூரி மாணவர்கள் ரத்த தானம்

கோவில்பட்டி அரசு கல்லூரி மாணவர்கள் ரத்த தானம் செய்தனர்.

கோவில்பட்டி (மேற்கு):

கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் ரத்ததான முகாம் நேற்று நடந்தது. முகாமை கல்லூரி முதல்வர் நிர்மலா தொடங்கி வைத்தார். டாக்டர் ஸ்ரீ வெங்கடேஷ் தலைமையில் மருத்துவ குழுவினர் 38 மாணவர்களிடம் இருந்து ரத்தம் சேகரித்தனர். இதற்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர் நவநீத கண்ணன், நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் இரா.சவுந்தர்ராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

SCROLL FOR NEXT