தமிழக செய்திகள்

விவசாயிகளுக்கு புதிதாக 50,000 மின்சார இணைப்புகள் வழங்க அரசாணை வெளியீடு

மின் இணைப்புக்கான 127.56 கோடி ரூபாய் மானிய செலவை அரசே ஏற்றுக் கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

விவசாயிகளுக்கு புதிதாக 50,000 மின்சார இணைப்புகள் வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 2026-2027 -ம் நிதியாண்டில் புதிதாக மின்சார இணைப்புகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மின் இணைப்புக்கான 127.56 கோடி ரூபாய் மானிய செலவை தமிழ்நாடு அரசே ஏற்றுக் கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விவசாய மின் இணைப்புகளை வழங்க, கட்டமைப்பு உள்ளிட்ட பணிகளுக்கான 750 கோடி ரூபாயை மின் வாரியம் ஏற்க உள்ளது. மொத்தம் 50,000 இணைப்புகளில், சாதாரணப் பிரிவில் 20,000 இணைப்புகள், சுயநிதி பிரிவில் 3,372 இணைப்புகள், விரைவு திட்டத்தில் 25,282 இணைப்புகள், மீதி அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT