சென்னை,
அரசு ஓட்டுநர்கள், நடத்துனர்கள், தொழில்நுட்ப பணியாளர்களை வேறு பணிகளுக்கு பயன்படுத்தக் கூடாது என்றும், அவர்களை வேறு பணிக்கு உட்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவுப்படி அரசு விரைவு போக்குவரத்து கழகம் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அரசு ஓட்டுனர்கள் நடத்துனர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களை வேறு எந்த பணிகளுக்கும் பயன்படுத்தக் கூடாது எனவும், அதை மீறி ஓட்டுனர்கள் நடத்துனர்கள் தொழில்நுட்ப பணியாளர்கள் வேறு பணிக்கு உட்படுத்தினால் கிளை மேலாளர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் தரப்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
குறிப்பாக மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவின் அடிப்படையில், ஓட்டுனர், நடத்துனர் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் உள்பட, அவர்களுடைய தகுதிகளுடன் குறிப்பிட்ட பணிக்கு நியமனம் செய்யப்பட்டவர்கள், அவரவர் பணியை மட்டுமே செய்ய வேண்டும் எனவும், எந்த ஒரு பணியாளரையும் வேறு பணிக்கு பயன்படுத்தக் கூடாது எனவும் சுற்றறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எந்த காரணத்துக்காகவும் நல்ல உடல்நிலையில் இருக்கக்கூடிய பணியாளரை, காசாளர், டிக்கெட் புக்கிங் மற்றும் பேருந்து நிலைய பணி, பேருந்து ஒதுக்கீட்டாளர் பணி போன்ற மற்ற பணிகளுக்கு பயன்படுத்தக் கூடாது எனவும், இதை மீறி செயல்படுவது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட கிளை மேலாளர்கள் மீது கடுமையான துறை சார்ந்த ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் தரப்பில தெரிவிக்கப்பட்டிருக்கிறது.