சென்னை,
அரசு வேலை மோசடி புகாரில் முன்னாள் அமைச்சர் சிவசங்கர் சென்னை மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார்.
போக்குவரத்து துறையில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி நடைபெற்றதாகக் கூறப்படும் பண மோசடி தொடர்பான புகாரில் விசாரணையின் ஒரு பகுதியாக, முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நேற்று சம்மன் அனுப்பினர்.
அதில் , ஜூலை 1-ம் தேதி (இன்று) காலை 10 மணிக்கு சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தற்போது முன்னாள் அமைச்சர் சிவசங்கர் ஆஜராகியுள்ளார்.