தமிழக செய்திகள்

அரசு பஸ்சில் திருச்சிக்கு கொண்டு சென்ற 2 கிலோ தங்கக்கட்டிகள் பறிமுதல்

இலங்கையில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவில் கடத்தல்காரர்கள் படகில் சுமார் 2 கிலோவுக்கும் அதிக மான தங்கக்கட்டிகளை மண்டபம் பகுதிக்கு கடத்தி கொண்டு வந்தனர்.

பனைக்குளம்,

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், தனுஷ்கோடி கடல் பகுதி வழியாக இலங் கைக்கு அவ்வப்போது கஞ்சா, ஹெராயின், ஐஸ்போதைப்பொருள் உள்பட பல் வேறு பொருட்கள் கடத்தி கொண்டு செல்லப்படுகின்றன.அதேபோல் இலங்கையில் இருந்து கடத்தல்காரர்கள் மூலம் படகில் தங்கக்கட்டி கள் இங்கு கடத்தி வரப்படுகிறது.

இந்த நிலையில் இலங்கையில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவில் கடத்தல்காரர்கள் படகில் சுமார் 2 கிலோவுக்கும் அதிக மான தங்கக்கட்டிகளை மண்டபம் பகுதிக்கு கடத்தி கொண்டு வந்தனர். இந்த தங் கக்கட்டிகளை மண்டபத்தை சேர்ந்த 3 வாலிபர்கள் ஒருவரிடம் ஒப்படைப்பதற்காக அரசு பஸ்சில் திருச்சிக்கு சென்றனர்.இதுகுறித்து சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் அதிகாரிகள் திருச்சி புறநகர் பகுதியில் உள்ள சோதனை சாவடியில் அந்த அரசு பஸ்சை நிறுத்தி அதில் இருந்த 3 வாலிபர்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தங்கக்கட்டிகளையும் பறிமுதல் செய்தனர். இந்த தங்கக்கட்டிகளின் மதிப்பு சுமார் ரூ.2 கோடிக்கும் அதிக மாக இருக்கும் என்று கூறப்படுகிறது.கைதான 3 பேரின் விவரம் குறித்தும், இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள் ளதா? என்பது குறித்தும் சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT