சென்னை,
அ.தி.மு.க.வில் மாணவர் அணிச் செயலாளர், தகவல் தொழில் நுட்பப் பிரிவு மாநில செயலாளராக இருந்தவரான சிங்கை ராமச்சந்திரன் கடந்த ஜூன் மாதம் அ.தி.மு.க.வில் இருந்து வெளியேறினார். இதனையடுத்து கடந்த மாதம் 11-ம் தேதி முதல்-அமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து, சிங்கை ராமச்சந்திரன் தன்னை த.வெ.க.வில் இணைத்துக் கொண்டார்.
இந்த நிலையில், தவெகவில் இணைந்த மூன்று வாரங்களில் சிங்கை ராமசந்திரனுக்கு அரசுப் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதாவது, தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்க (TANSIM) தலைவராக நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.