சென்னை,
தமிழ்நாடு கவர்னர் மாளிகையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் திருவள்ளுவர் புகைப்படத்திற்கு கவர்னர் அர்லேகர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதற்காக வைக்கப்பட்டு இருந்த திருவள்ளுவர் படத்திற்கு காவி உடை அணிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகல் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. கவர்னரின் செயல்பாடுகள் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் கண்டனம் தெரிவித்துள்ளன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என சமத்துவத்தை வலியுறுத்திய திருவள்ளுவரை சனாதனி என்று வரையறுக்கும் தமிழ்நாடு கவர்னரின் கருத்து கடும் கண்டனத்திற்குரியது.
எம்மதத்தையும் சாராத வரை காவி உடை தரித்தவராக உருவகப்படுத்துவது வள்ளுவரை அவமானப்படுத்தும் செயல். கவர்னர் அர்லேகர் இச்செயலுக்காக தமிழ்நாடு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.