தமிழக செய்திகள்

நாளை கவர்னர் மாளிகை முற்றுகைப் போராட்டம் - இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு

கவர்னர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் மாநிலச் செயலாளர் பா.தினேஷ் தலைமையில் நடைபெற உள்ளது.

சென்னை,

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-

அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் கல்வியைப் பாதுகாப்போம், கவர்னரை நிராகரிப்போம் என்ற முழக்கத்தோடு பிப்ரவரி 21 ஆம் தேதி சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு சைதாப்பேட்டை, பனகல் மாளிகை, கலைஞர் வளைவில் இருந்து பேரணியாக சென்று கவர்னர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் மாநிலச் செயலாளர் பா.தினேஷ் தலைமையில் நடைபெற உள்ளது.

போராட்டத்தை முன்னாள் மாநிலச் செயலாளர் க.சந்தானம் தொடங்கி வைக்கிறார். போராட்டத்தில் அகில இந்திய பொதுச் செயலாளர் தினேஷ் சீரங்கராஜ், அகில இந்திய தலைவர் விராஜ் தேவாங், இளைஞர் பெருமன்றம் மாநிலச் செயலாளர் க.பாரதி, அனைத்திந்திய மாணவர் பெருமன்ற மாநிலத் தலைவர் க‌.இப்ராகிம் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்த உள்ளனர்.

முற்றுகை போராட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் தோழர் மு.வீரபாண்டியன் கலந்துகொண்டு நிறைவுரை உரையாற்ற உள்ளார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.