தமிழக செய்திகள்

2 மனைவிகள் இருக்கும்போதே..3-வதாக பள்ளி மாணவியை திருமணம் செய்த பட்டதாரி இளைஞர்

மாணவிக்கு தாலி கட்டி, அங்கு உள்ள லாட்ஜில் அறை எடுத்து தங்கி அவருடன் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.

காஞ்சிபுரம்,

இரண்டு மனைவிகள் இருக்கும் நிலையில் மூன்றாவதாக 15 வயது மாணவியை ஆசை வார்த்தை கூறி, கடத்திச் சென்று தாலி கட்டி, குடும்பம் நடத்திய பட்டதாரி இளைஞர் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாணவி மாயம்

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அடுத்த மல்லிகாபுரம் கிராமத்தில் கடந்த 13ஆம் தேதி புனித அந்தோணியார் ஆலையை தேர் திருவிழா நடைபெற்றது, அப்போது உத்திரமேரூர் அடுத்த நெல்வாய் கிராமத்தில் இருந்த திருவிழாவிற்கு குடும்பத்தோடு வந்திருந்த 15 வயது மாணவி ஒருவர் மாயமானதாக அவரது பெற்றோர் உத்திரமேரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்த அடிப்படையில் உத்திரமேரூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது சிறுமியின் செல்போன் எண்ணிற்கு அடிக்கடி அழைப்பு வந்த ஒரு மொபைல் எண்ணை சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் உத்திரமேரூர் போலீசார் ஆய்வு மேற்கொண்டதில், அந்த எண் உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியம், ஆளும்சேரி ஊராட்சி சேந்தாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த புண்ணியகோடி என்பவர் மகன் ஜீவா என்கின்ற ஜீவானந்தம் வது 45 என்பவரது மொபைல் நம்பர் என்று தெரியவந்தது.

தாலியுடன் மாணவி

அவரை தேடிய போலிசார் அவர் தலைமறைவாகி இருப்பது தெரிய வந்தது, அதனை அடுத்து சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் அவரது மொபைல் எண்ணை ஆய்வு செய்தபோது அது செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கத்தில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு அறை எடுத்து தங்கியிருந்த ஜீவாவையும், அவருடன் கழுத்தில் தாலியுடன் இருந்த மாணவியையும், போலீசார் உத்திரமேரூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் ஜீவானந்தத்திற்கு ஏற்கனவே அவரது ஊரிலேயே உள்ள தேவி வயது 36 என்ற பெண்ணுடன் திருமணம் ஆகி அவருக்கு கல்லூரி படிக்கும் ஒரு மகனும், பள்ளியில் படிக்கும் ஒரு மகனும், ஒரு மகளும் இருப்பது தெரியவந்தது. மேலும் இரண்டாவதாக உத்திரமேரூர் வேட்பாளையத்தைச் சேர்ந்த சுமித்ரா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டதில் நான்கு வயதில் ஒரு ஆண் குழந்தையும், நான்கு மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

காதல்

இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள ஒரு அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு முடித்து இந்த ஆண்டு 11-வது வகுப்பு படித்து வரும் பள்ளி மாணவியுடன் ஜீவானந்தத்திற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவரை பலமுறை தன்னுடைய பாலியல் இச்சைகளுக்கு பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் அந்த மாணவி கர்ப்பமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 13 ஆம் தேதி தனது குடும்பத்தாருடன் உத்திரமேரூர் அடுத்த மல்லிகாபுரம் அந்தோனியார் கோவில் திருவிழாவுக்கு குடும்பத்துடன் வந்த சிறுமியை செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் கடத்திச் சென்ற ஜீவானந்தம் அங்குள்ள கோவில் ஒன்றில் சிறுமிக்கு தாலி கட்டி, அங்கு உள்ள லாட்ஜில் அறை எடுத்து தங்கி அவருடன் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.

போஸ்கோ சட்டம்

இதனை அடுத்து ஜீவானந்தத்தின் மீது போலீசார் போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இரண்டு மனைவிகள் இருக்கும் போது 45 வயது நபர், 15 வயது பள்ளி மாணவியை கடத்திச் சென்று தாலி கட்டி, பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட சம்பவம் உத்திரமேரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.