தமிழக செய்திகள்

கிணற்றில் துணிதுவைக்க சென்ற பாட்டி ,பேரன்,பேத்தி உயிரிழப்பு

விளையாடி கொண்டிருந்த தஷ்வந்த் மற்றும் கெளஷிகா கால் இடறி உள்ளே விழந்தனர்.

செங்கல்பட்டு,

மதுராந்தம் அருகே சிலாவட்டம் கிராமத்தில் வசித்துவரும் சாந்தி மற்றும் பேரன் தஷ்வந்த் (ஏழாம் வகுப்பு), பேத்தி கெளஷிகா (ஆறாம் வகுப்பு) அருகே உள்ள சுற்றுச்சுவர் இல்லாத கிண்ற்றில் துணி துவைப்பதற்காக செல்லும் பொது அவர்களை அழைத்து சென்றனர்.

அப்போழுது சாந்தி கிணற்றில் துணிதுவைத்து கொண்டிருந்தப்போது அருகே விளையாடி கொண்டிருந்த தஷ்வந்த் மற்றும் கெளஷிகா கால் இடறி உள்ளே விழந்தனர் காப்பாற்ற சென்ற சாந்தியும் நீச்சல் தெரியாததால் தண்ணீர் மூழ்கி உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த தீயணைப்பு துறையினர் மூன்று பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சொகத்தை ஏற்படுத்தியுள்ளது