தமிழக செய்திகள்

மே தினம்: கவர்னர் வாழ்த்து

உழைப்பாளர் தின கொண்டாட்டம் என்பது, நம்பிக்கை, மரியாதை மற்றும் வளர்ச்சி சக்கரத்திற்கு உறுதுணையாக இருக்கும்

சென்னை,

தமிழக கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் வெளியிட்டுள்ள மே தின வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:

உழைப்பாளர் தின கொண்டாட்டம் என்பது, நம்பிக்கை, மரியாதை மற்றும் வளர்ச்சி சக்கரத்திற்கு உறுதுணையாக இருக்கும் உழைக்கும் வர்க்கத்தினரை கவுரவிக்கும் விதமாக இருக்கிறது என்பதை உறுதி கூறுகிறேன்.

நவீனமயமாக்கல் என்ற புதிய அத்தியாயத்தில் வேலை திறன் வியப்படையச்செய்யும் வகையில் பல்வேறு மாற்றங்களை கண்டுள்ளது. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தொழிலாளர்களும், நிறுவனங்களும் உலகமயமாக்கல் முறைக்கு மாறிவருகின்றன. உழைக்கும் வர்க்கத்தினருக்கு மற்றும் அவர்களுடைய குடும்பத்தினருக்கு சிறந்த பங்களிப்பு செய்து பாதுகாப்பு, ஆரோக்கியமான சுற்றுச்சூழலை உருவாக்கித்தர உறுதி ஏற்போம்.

மே தினத்திற்கும், உழைப்பாளர்களின் முயற்சிகள் வெற்றியடைவதற்கும் என்னுடைய இதயப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.