சென்னை,
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ முதல்கட்டத் தேர்வுகள், திட்டமிட்டபடி வரும் நவம்பர் 1-ம் தேதி அன்று நடைபெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள 846 பணியிடங்களை நிரப்புவதற்காக இந்த தேர்வு நடத்தப்படுகிறது. இதில் குரூப் 2 பிரிவில் (நேர்முகத் தேர்வு பதவிகள்) 43 இடங்களும், குரூப் 2ஏ பிரிவில் (நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்) 803 இடங்களும் அடங்கும்.
இந்த வேலைவாய்ப்புத் தேர்வை எழுதுவதற்காக தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 4.89 லட்சம் பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர். இதனால் இம்முறை போட்டிக் களம் தீவிரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், தலைநகர் சென்னையில் மட்டும் 51,721 தேர்வர்கள் இந்த முதல்கட்டத் தேர்வை எழுத உள்ளனர். தேர்வுக்கான விரிவான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு ஏற்பாடுகளை தேர்வாணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ முதல்கட்டத் தேர்வுகள், திட்டமிட்டபடி வரும் நவம்பர் 1-ம் தேதி அன்று நடைபெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. தேர்வு அன்று முற்பகல் காலை 09:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை தேர்வு நடைபெறும். தேர்வர்கள் தேர்வு தொடங்குவதற்கு முன்னதாகவே தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மையங்களுக்கு வருகை தருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் ஏற்கனவே அக்டோபர் 21-ந்தேதி தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுவிட்டன. தேர்வர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவு (OTR) பக்கத்திற்கு சென்று, விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.