தமிழக செய்திகள்

ஜி.எஸ்.எல்.வி. எப்-18 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது

வழிகாட்டுதல் சேவைக்காக என்.வி.எஸ்-03 செயற்கைக்கோள் இதில் பயணிக்க இருக்கிறது.

சென்னை,

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலுள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 11.51 மணிக்கு ஜி.எஸ்.எல்.வி.-எப்18 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது. இதில் வழிகாட்டுதல் சேவைக்காக என்.வி.எஸ்-03 செயற்கைக்கோள் பயணிக்க இருக்கிறது.

ஜி.எஸ்.எல்.வி. வகை ராக்கெட்டுகளுக்கான அதிகாரப்பூர்வ கவுண்ட்டவுன் ஏவுவதற்கு சுமார் 24 அல்லது 26 மணி நேரத்திற்கு முன்பு தொடங்கும். அந்த வகையில், இந்த ராக்கெட்டுக் கான கவுண்ட்டவுன் இன்று (வியாழக்கிழமை) இரவு அல்லது நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலையில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பணிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) விஞ்ஞானிகள் விண்ணில் உள்ள கண்' என்று அழைக்கும் 'ஈ.ஓ.எஸ்-05' செயற்கைக்கோள், இந்தியாவின் முதல் புவி ஒத்திசைவு பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளாகும். இந்த செயற்கைக்கோள் ஜி.எஸ்.எல்.வி எப்-17 ராக்கெட் மூலம் கடந்த செப்டம்பர் 8-ந்தேதி புவி-ஒத்திசைவு சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.

தற்போது அங்கிருந்து படங்களை அனுப்பத் தொடங்கியுள்ளது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜினை கொண்ட இந்த ஜி.எஸ்.எல்.வி மார்க்-2 ரக ராக்கெட்டுகள், கடந்த 2021-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து 6 முறை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT