தமிழக செய்திகள்

வணிக சிலிண்டருக்கான 70 சதவீத ஒதுக்கீட்டின் முழு பலனைப் பெறுவதற்கான வழிமுறைகள்

சில நிபந்தனைகளை வாடிக்கையாளர்கள் பூர்த்தி செய்தால் மட்டுமே, முழு 70 சதவீத ஒதுக்கீட்டின் பலனைப் பெற முடியும்.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

எல்பிஜி நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, இந்திய அரசாங்கத்தால் வணிக எல்பிஜி ஒதுக்கீடு ஆரம்பத்தில் 20% ஆகக் குறைக்கப்பட்டது. இது படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, தற்போது வணிக வாடிக்கையாளர்கள் நெருக்கடிக்கு முந்தைய அளவில் 70% வரை பெறத் தகுதியுடையவர்கள் ஆவர். இருப்பினும், சில நிபந்தனைகளை வாடிக்கையாளர்கள் பூர்த்தி செய்தால் மட்டுமே, முழு 70% ஒதுக்கீட்டின் பலனைப் பெற முடியும்.

அனைத்து வணிக / தொழில்துறை எல்பிஜி நுகர்வோரும், கூடுதல் ஒதுக்கீட்டிலிருந்து எல்பிஜியைப் பெறுவதற்குத் தகுதி பெறுவதற்கு சம்பந்தப்பட்ட எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களில் (IOCL, HPCL, BPCL) பதிவு செய்ய வேண்டும். மேலும், அத்தகைய எல்பிஜி நுகர்வோர், குழாய்வழி இயற்கை எரிவாயு (PNG) இணைப்புகளுக்குப் பொருந்தும் வகையில், தத்தமது மாவட்டங்களில் உள்ள நகர எரிவாயு விநியோக (CGD) நிறுவனங்களில் பதிவு செய்து,

PNG பெறுவதற்கான தங்கள் தயார்நிலையை வெளிப்படுத்த வேண்டும். அனைத்து வணிக வாடிக்கையாளர்களும் மேற்கண்ட நிபந்தனைகளுக்கு இணங்கி, 70% ஒதுக்கீட்டின் பலனைப் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

விருப்பமுள்ள வணிக/தொழில்துறை எல்பிஜி நுகர்வோர், PNG இணைப்புகளைப் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள CGD நிறுவனங்களைத் தொடர்பு கொள்ளலாம்:

மாவட்டங்கள்CGD நிறுவனம்கட்டணமில்லா தொடர்பு எண்
சென்னை, திருவள்ளூர், நாகப்பட்டினம். Torrent Gas1800-2125-6789
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராமநாதபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர்.⁠AG&P/ Think Gas1800-202-2999
திருப்பூர், கடலூர், திருவாரூர், மயிலாடுதுறை.Adani Total Gas079-47545252
கோவை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, மதுரை, தேனி, விருதுநகர், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி.IOCL1800-180-7788
திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், திண்டுக்கல், கரூர்.Mega Engineering1800-123-1803
திருச்சிராப்பள்ளி, நாமக்கல்.IRM Energy1800-891-1310
ஈரோடு, நீலகிரி.BPCL1800-22-4344

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்:

கே.எஸ்.ஆர். பிரசாத்,

நிர்வாக இயக்குனர், Torrent Gas Chennai Pvt Ltd,

CGD Network மாநில அளவிலான ஒருங்கிணைப்பாளர்

தொடர்பு எண்: +91 63574 69742

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.