தமிழக செய்திகள்

பைக் டாக்சிக்கான வழிகாட்டுதல்களை 6 மாதத்தில் ஏற்படுத்த வேண்டும்- மதுரை ஐகோர்ட் கெடு

பைக் டாக்சிகளை இயக்குவதற்கான முறையான அனுமதி வழங்குவது குறித்து பதில் அளிக்கும்படி உத்தரவி டப்பட்டு இருந்தது.

மதுரையைச் சேர்ந்த நவீன்குமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் "தமிழகத்தில் டிஜிட்டல் மைய பைக் டாக்சி சேவைகள் அதிகரித்து வருகின்றன.இந்த சேவைகளை ஒழுங்குபடுத்துவதற்கு அரசின் திட்டமோ, விதிகளோ இல்லை.ஆட்டோ ரிக்சா, வாடகை கார்களை போல பைக் டாக்சி தனித்து இயங்க முடி யாது. எனவே அவற்றை சட்டப்பூர்வமாக இயக்க தேவையான அனுமதிகளை வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, பைக் டாக்சிகளை இயக்குவதற்கான முறையான அனுமதி வழங்குவது குறித்து பதில் அளிக்கும்படி உத்தரவிடப்பட்டு இருந்தது. இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் வேல்முருகன், ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, இந்த விவகாரத்தை பொறுத்தவரை ஏற்கனவே இந்த கோர்ட்டில் தெரிவித்தபடி பைக் டாக்சிகளை இயக்குவதற்கான வழிகாட்டுதல் களை ஏற்படுத்த சிறப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது.

அந்த குழு ஆராய்ந்து அளிக்கும் அறிக்கையை பெற்ற உடன் வழிகாட்டுதல்கள் பிறப்பிக்கப்படும் என தெரிவித்தார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், சிறப்பு குழுவின் அறிக்கையின்படி வழிகாட்டுதல்களை ஏற்படுத்தி அதுகுறித்த தகவல்களை 6 மாதத்தில் இந்த கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு இந்த வழக்கை முடித்து வைத்தனர்.

SCROLL FOR NEXT