தமிழக செய்திகள்

பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: ஓட்டுநர், நடத்துநர்களுக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் அறிவுரை

பயணிகளை பாதி வழியில் இறக்கிவிடுவது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சென்னை,

மாநகர் போக்குவரத்து கழக தலைமையகத்தில் இன்று (03-11-2026) நடைபெற்ற கூட்டத்தில், பேருந்துகள் இயக்கத்தின் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் மற்றும் அறிவுரைகள் குறித்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் அறிவுரை வழங்கினார்.

வழிமுறைகள் மற்றும் அறிவுரைகள் என்னென்ன..?

  • பேருந்து நிறுத்தங்களில் பேருந்துகளை முறையாக நிறுத்தி. பயணிகளைப் பாதுகாப்பாக ஏற்றிச் செல்லவும், இறக்கிவிடவும் வேண்டும்.

  • பயணிகளை ஏற்ற மறுப்பது அல்லது பயணிகளைப் பாதி வழியில் இறக்கிவிடுவது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது.

  • பேருந்துகளை தூய்மையாக பராமரித்திட வேண்டும்.

கூடுதல் அக்கறை

  • அனைத்து பயணிகளிடமும் மரியாதையுடனும், பொறுமையுடனும் நட்பான முறையிலும் நடந்துகொள்ள வேண்டும் குறிப்பாக பெண்கள், மூத்த குடிமக்கள். மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள். திருநர் மற்றும் நோயாளிகளிடம் கூடுதல் அக்கறையுடன் நடந்துகொள்ள வேண்டும்.

  • ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் தொடர்பான அனைத்துப் புகார்களையும் கிளை மேலாளர்கள், மண்டல மேலாளர்கள் மற்றும் அந்தந்த போக்குவரத்துக் கழகத்தின் புகார் பிரிவின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிறப்பு பேருந்துகள்

  • கிளை மேலாளர்கள், மண்டல மேலாளர்கள் மற்றும் பொது மேலாளர்கள் பேருந்து இயக்கம் மற்றும் பணியாளர்களின் செயல்பாடுகளைக் கள அளவில் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

  • ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு அவ்வப்போது பயிற்சிகள், ஆலோசனைகள் மற்றும் அறிவுறுத்தல்கள் வழங்கி, பயணிகளிடம் பொறுப்புடனும், கனிவுடனும் நடந்துகொள்வதை உறுதிப்படுத்த வேண்டும்.

  • விழா காலங்கள் மற்றும் தொடர் விடுமுறை காலங்களில் இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளில் பணிபுரியும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் அனைவரும் அந்தந்த பேருந்து நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள ஓய்வறைகளில் மட்டுமே தங்க வேண்டும்.

SCROLL FOR NEXT