வெளிப்பாளையம்:
நாகை காடம்பாடி மகாலட்சுமி நகரில் உள்ள சாய்பாபா கோவிலில் குரு பூர்ணிமா விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி சாய்பாபாவிற்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து 108 நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டன. இதில் நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவி உள்பட பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.