தமிழக செய்திகள்

சாய்பாபா கோவிலில் குரு பூர்ணிமா பூஜை

சாய்பாபா கோவிலில் குரு பூர்ணிமா பூஜை நடைபெற்றது.

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் சேர்வைக்கார தெருவில் உள்ள ஸ்ரீ சாய்பாபா கோவிலில் குரு பூர்ணிமா பூஜை நடைபெற்றது. இதையொட்டி ஸ்ரீ சாய் பாபாவிற்கு பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, வஸ்திரம் சாத்தப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.