சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மதுரை கோட்டத்தில் நடைபெற இருக்கும் பராமரிப்பு பணி காரணமாக, சில எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
* நாகர்கோவிலில் இருந்து வருகிற 5,9,12,16,19,20,30 ஆகிய தேதிகளில் காலை 6.15 மணிக்கு புறப்பட்டு மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.16352), மதுரை, மானா மதுரை, காரைக்குடி, திருச்சி ஆகிய மாற்றுப்பாதை வழியாக செல்லும். திண்டுக்கல் செல்லாது. கூடுதலாக அருப்புக் கோட்டை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய நிறுத்தங்களில் நின்று செல்லும்.
* கன்னியாகுமரியில் இருந்து வருகிற 4,11,18,25 ஆகிய தேதிகளில் காலை 5.50 மணிக்கு புறப்பட்டு ஹவுரா செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (12666), மதுரை, மானாமதுரை, காரைக்குடி, திருச்சி ஆகிய மாற்றுப்பாதை வழியாக செல்லும். கொடைக்கானல் சாலை மற்றும் திண்டுக்கல் செல்லாது. கூடுதலாக சிவகங்கை, புதுக்கோட்டை ஆகியவற்றில் நின்று செல்லும்.
* குருவாயூரில் இருந்து இன்று (வெள்ளிக்கிழமை), 4,5,6,8,9,10,11,12,13,15,16,17,18,19,20,23,24,25,26,27,28,29 ஆகிய தேதிகளில் இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16128), விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி ஆகிய மாற்றுப்பாதை வழியாக செல்லும். மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், மணப்பாறை செல்லாது. கூடுதலாக அருப்புக்கோட்டை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
* கன்னியாகுமரியில் இருந்து வருகிற 10, 17, 24 ஆகிய தேதி களில் காலை 5.15 மணிக்கு புறப்பட்டு ஐதராபாத் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (17070), மதுரை, மானாமதுரை, காரைக் குடி, திருச்சி ஆகிய மாற்றுப்பாதை வழியாக செல்லும். கொடைக்கானல் சாலை, திண்டுக்கல் செல்லாது. கூடுதலாக சிவங்ககை, புதுக்கோட்டை ஆகிய நிறுத்தங்களில் நின்று செல்லும்.
* தூத்துக்குடியில் இருந்து வருகிற 29-ந்தேதி காலை 7.40 மணிக்கு புறப்பட்டு காச்சிகுடா செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (17616), விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழி யாக செல்லும். மதுரை, திண்டுக்கல் செல்லாது. கூடுதலாக, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகியவற்றில் நின்று செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.