மதுரை,
தென்னக ரெயில்வேக்கு உள்பட்ட திருவனந்தபுரம் கோட்டத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடந்து வருவதால் அந்த பாதையில் இயக்கப்படும் குருவாயூர்-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதாவது, குருவாயூர்-சென்னை குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16128) வருகிற 13-ந் தேதி, 20-ந் தேதி மற்றும் 27-ந் தேதிகளில் மட்டும் எர்ணாகுளம் டவுன் ரெயில் நிலையத்தில் இருந்து மாற்றுப்பாதையில் கோட்டயம், செங்கனச்சேரி, திருவல்லா, செங்கன்னூர் வழியாக கொல்லம் வந்து சேரும். இந்த ரெயில் நிலையங்களில் மேற்கண்ட நாட்களில் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் தற்காலிகமாக நின்று செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.