தமிழக செய்திகள்

அமைச்சர் விஜய் பாலாஜி தலைமையில் கைத்தறி துறையின் ஆய்வுக் கூட்டம்

தேசிய கைத்தறி தின விழா குறித்து கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

சென்னை,

கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர் ம. விஜய் பாலாஜி தலைமையில் இன்று கைத்தறி துறையின் ஆய்வுக் கூட்டம் கைத்தறி இயக்குநரக கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கைத்தறி துறையில் செயல்படுத்தப்படும் வேட்டி சேலை வழங்கும் திட்டம், பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்கும் திட்டம், ஆரணி கைத்தறி பட்டுப்பூங்கா நிறுவும் பணி, கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கும் இலவச மின்சாரம்,

கைத்தறி ஆதரவுத் திட்டம், நெசவாளர் முத்ரா திட்டம், தள்ளுபடி மானியம் வழங்கும் திட்டம், கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடுகள், கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கும் நலத்திட்ட உதவிகள் மற்றும் 07.08.2026 அன்று நடைபெறவுள்ள தேசிய கைத்தறி நாள் விழா குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

‘வெற்றித் தமிழகம்’ தொலைநோக்குத் திட்டங்களான நெசவாளர் உதவித் தொகை, நெசவு மூலப்பொருள் கொள்முதல் மானியம், ஆயுள் காப்பீடு, சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டம், ஒருங்கிணைந்த நெசவாளர் நகரங்கள், நெசவாளர் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை, வெற்றித் தறி, சோலார் பேனல் மானியம், காஞ்சிபுரம் பட்டுச் சுற்றுலா போன்ற திட்டங்களை நடைமுறைப்படுத்துவது குறித்து மாண்புமிகு கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர் அறிவுரை வழங்கினார்.