தமிழக செய்திகள்

ஹேப்பி நியூஸ்.. தீபாவளிக்கு மறுநாள் பொது விடுமுறை அறிவிப்பு..!

அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

சென்னை,

அடுத்த மாதம் 8ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தீபாவளி கொண்டாடப்படும் நிலையில், அடுத்த நாளான திங்கள் கிழமை (நவ.09) அன்று பொது விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை தீபாவளி

வெளியூர்களில் தங்கி பணிபுரியும் அரசு ஊழியர்கள் மற்றும் வெளியூர்களில் படிக்கும் மாணவர்கள், தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 8-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. இதனால், அதற்கு முந்தைய நாளான, சனிக்கிழமை சேர்த்து, வழக்கமான வார இறுதி விடுமுறை போல முடிந்துவிடும்.

மேலும், இந்த ஆண்டு தீபாவளி அன்று அமாவாசை வருவதால், பலர் அன்று அசைவ உணவுகளைத் தவிர்த்து, மறுநாள் அசைவ உணவுகளை சமைத்து சாப்பிடுவார்கள். சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் தீபாவளி அன்றே இரவு பணியிடங்களுக்குத் திரும்புவதும் சிரமமாக இருக்கும்.

விடுமுறை கோரிக்கை

எனவே, பொதுமக்களும் அரசு ஊழியர்களும் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக தீபாவளியைக் கொண்டாடி, சிரமமின்றி பணியிடங்களுக்குத் திரும்பும் வகையில், நவம்பர் 9-ந்தேதி திங்கட்கிழமையும் அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என்று அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இது தொடர்பாக தமிழக அரசு ஆலோசித்து வந்தது.

அனைத்து கல்வி நிறுவனங்கள்

இந்நிலையில் நவ., 8ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தீபாவளி கொண்டாடப்படும் நிலையில், அடுத்த நாளான திங்கள் கிழமை (நவ.09) அன்று பொது விடுமுறை அளிக்கப்பட்டுவதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தீபாவளி பண்டிகை 08.11.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு தீபாவளிக்கு அடுத்த நாள் 09.11.2026 திங்கட்கிழமை அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள். பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி ஆணை வெளியிடப்படுகிறது.

ஆணை:-

இவ்வாண்டு, 08.11.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள். ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்று விழாவினை மகிழ்வுடன் கொண்டாடி திரும்புவதற்கு ஏதுவாக, 09.11.2026 திங்கட்கிழமை அன்று ஒருநாள் மட்டும் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்குமாறு பலதரப்பிலிருந்தும் அரசுக்கு கோரிக்கைகள் வரப்பெற்றன.

2. அக்கோரிக்கைகளை, அரசு கவனமுடன் பரிசீலித்து, தீபாவளிக்கு அடுத்த நாளான 09.11.2026 திங்கட்கிழமை அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள். பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளித்து, அவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 28.11.2026 (சனிக்கிழமை) அன்று பணிநாளாக அறிவித்து ஆணை வெளியிடப்படுகிறது.

3. மேற்கண்ட உள்ளூர் விடுமுறை நாளானது, செலாவணி முறிச்சட்டம் 1881 (Under Negotiable Instruments Act, 1881)-என்பதால், அவசர அலுவல்களை மேற்கொள்ளும் பொருட்டு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கருவூலங்கள், சார்நிலைக் கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படுவதற்கு தகுந்த ஏற்பாடுகள் செய்யுமாறு அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

(ஆளுநரின் ஆணைப்படி)

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

doc.pdf
Preview
SCROLL FOR NEXT