சென்னை,
இஸ்லாமியர்களின் புனித ரமலான் நோன்பு கடந்த மாதம் 19-ந்தேதி தொடங்கியது. கடந்த ஒரு மாதமாக இஸ்லாமியர்கள் நோன்பு கடைபிடித்து வந்த நிலையில், ரம்ஜான் முடிவுக்கு வந்ததற்கான அறிகுறியாக பிறை சந்திரன் நேற்றிரவு தெரிந்தது. இதைத் தொடர்ந்து இன்று இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்
தமிழக பாஜக தலைவர் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
புனித ரம்ஜான் பண்டிகையை கொண்டாடும் இஸ்லாமிய சகோதரர் சகோதரிகள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த இனிய ரம்ஜான் நல்வாழ்த்துகள்!
இந்த புனித மாதம் நம் உள்ளங்களை தூய்மைப்படுத்தி, கருணை, பொறுமை, தியாகம் மற்றும் மனிதநேயத்தின் உயர்ந்த மதிப்புகளை நமக்குள் மேலும் வலுப்படுத்தும் அருமையான காலமாகும்.
அனைவரின் வாழ்விலும் அமைதி நிலைத்து, மகிழ்ச்சி பெருகி, அன்பும் நிம்மதியும் என்றும் தங்கட்டும். சகோதரத்துவமும் நல்லிணக்கமும் மேலும் வளர்ந்து, உங்கள் இல்லங்களில் செழிப்பும் மகிழ்ச்சியும் நிரம்பியிருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன். இந்த ரம்ஜான் உங்கள் வாழ்வில் புதிய நம்பிக்கையையும் ஒளியையும் கொண்டு வரட்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.