தமிழக செய்திகள்

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு தி.மு.க. ஆதரவு தெரிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது - தமிழிசை

தொகுதி மறுவரையறை மசோதா பாராளுமன்றத்தில் நிச்சயமாக வெற்றி பெறும் என தமிழிசை கூறியுள்ளார்.

சென்னை,

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு தி.மு.க. ஆதரவு தெரிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

திமுக ஆதரவு

தொகுதி மறுவரை மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய இருக்கிறது நிச்சயமாக மசோதா வெற்றி பெறும் ஏனென்றால் மாற்று கருத்து உள்ள கட்சிகள் கூட ஒத்த கருத்தில் வந்து இதற்கு ஆதரவு தெரிவிக்க இருக்கிறார்கள். திராவிட முன்னேற்ற கழகம் இந்த மசோதாவிற்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள் என்ற செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது.

தொகுதி மறு வரை மசோதா பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவோடு சேர்ந்து நிறைவேற்றப்பட இருக்கிறது ஆக இன்று திருப்பரங்குன்றம் விளக்கேற்ற போகும் வெற்றி திருநாளில் இன்னொரு வெற்றியை நாம் பார்க்க இருக்கிறோம் என்னை பொருத்தமட்டில் இன்று மூன்று வெற்றி திருவிழாக்கள் ஒன்று திருப்பரங்குன்றத்தில் தீபத்தூணில் விளக்கேற்றுவது, இரண்டாவது இந்த தொகுதி மறு வரை மசோதா பெண்கள் அதிகாரம் அளிப்பதோடு சேர்ந்து நிறைவேற்றப்பட இருக்கிறது, மூன்றாவது இன்று "காசி தமிழ் சங்கமம் 5.0" திருக்குறள் கற்போம் என்ற ஒரு கொள்கையோடு இந்த ஆரம்பம் ஆகிறது ஆக மகிழ்ச்சி. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT