தமிழக செய்திகள்

அனைவருக்கும் இனிய யுகாதி திருநாள் நல்வாழ்த்துகள் - த.வெ.க. தலைவர் விஜய்

அனைவரிடமும் அன்பு, மகிழ்ச்சி, வளம், சகோதரத்துவம் தழைக்கட்டும் என்று விஜய் தெரிவித்துள்ளார்.

சென்னை,

யுகாதி திருநாள் என்பது தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களின் புத்தாண்டு தினமாகும். அந்த வகையில் யுகாதி திருநாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், யுகாதி திருநாளையொட்டி தெலுங்கு, கன்னடம் பேசும் மக்களுக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

தெலுங்கு, கன்னட சகோதர சகோதரிகள் அனைவருக்கும் இனிய யுகாதி திருநாள் நல்வாழ்த்துகள்.

அனைவரிடமும் அன்பு, மகிழ்ச்சி, வளம், சகோதரத்துவம் தழைக்கட்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.