சென்னை,
அனைவருக்கும் ஐஐடிஎம் திட்டத்தில் மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை என வெளியான தவறான செய்தி என்று பள்ளிக் கல்வித்துறை விளக்கம் கொடுத்துள்ளது.
இது தொடர்பாக தகவல் நம்பகத்தன்மை பிரிவு வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
அனைவருக்கும் ஐஐடிஎம் திட்டத்தில் மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை என வெளியான தவறான செய்தி
இது முற்றிலும் தவறான தகவல்.
இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அளித்துள்ள விளக்கத்தில், "அனைவருக்கும் ஐஐடிஎம் ( IITM ) திட்டத்தின் கீழ் 2026 - 27ஆம் கல்வியாண்டில் 30 மாணவ - மாணவிகள் சேர்க்கை பெற்றுள்ளனர். நடப்பாண்டில் எந்த ஒரு மாணவர் சேர்க்கையும் நடைபெறவில்லை என்ற செய்தி தவறானது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.