தமிழக செய்திகள்

உயர்கல்வி நுழைவுத் தேர்வு சிறப்பு பயிற்சி நிறுத்தப்பட்டதா? - தகவல் நம்பகத்தன்மை பிரிவு விளக்கம்

12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு பயிற்சி நிறுத்தப்பட்டதாக திமுக நிர்வாகி ஒருவர் பேசியுள்ளார்.

சென்னை,

உயர்கல்வி நுழைவுத் தேர்வு சிறப்பு பயிற்சி நிறுத்தம் என பரவும் தவறான தகவல் குறித்து தகவல் நம்பகத்தன்மை பிரிவு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவித்திருப்பதாவது;-

பரவும் செய்தி

சமூக நீதித்துறையின் கீழ் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் உயர்கல்வி நுழைவுத் தேர்வு சிறப்பு பயிற்சி நிறுத்தப்பட்டதாக திமுக நிர்வாகி ஒருவர் பேசியுள்ளார்.

உண்மை என்ன ?

இது முற்றிலும் தவறான தகவலாகும்.

இது தொடர்பாக சமூக நீதித்துறை அளித்துள்ள விளக்கத்தில், "மாணவ - மாணவிகளுக்கு அளிக்கப்படும் IIT, JEE, NEET உள்ளிட்ட 19 வகை உயர்கல்வி நுழைவுத் தேர்வுகளுக்கான சிறப்பு பயிற்சி நிறுத்தப்படவில்லை. கடந்த ஆண்டு 187 பேர் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்ற நிலையில், நடப்பு ஆண்டில் IITTM - நொய்டா, NIT - ஆந்திரா, NIFT - சென்னை மற்றும் பெங்களூரு, FDDI - சென்னை உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் இதுவரை 357 மாணவ - மாணவிகள் சேர்க்கை பெற்றுள்ளனர். இந்த பயிற்சி தொடர்ந்து நடைபெறுவதோடு, அனைத்து ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மேல்நிலைப் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவறான தகவலைப் பரப்பாதீர் !

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.