தமிழக செய்திகள்

தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ஹசீனா சையது நீக்கம்

செல்லப்பெருந்தகை, கிரிஷ் சோடங்கர் தலையீட்டால் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என ஹசீனா சையது கூறியுள்ளார்.

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் அறிவிப்பையடுத்து திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி உறுதியானது. காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் உள்ளிட்டவை குறித்து காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி உள்ளிட்டோர் ஏற்கனவே அதிருப்தி தெரிவித்திருந்தனர்.

தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் ஹசீனா சையத் தனக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை என்று குற்றம்சாட்டியிருந்தார்.

இந்நிலையில் அவர் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் மீது அவர் கடும் அதிருப்தியை முன்வைத்துள்ளார். காங்கிரஸ் கட்சியும் அவரை கட்சியில் இருந்து நீக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தலைமை தமக்கு வாய்ப்பு தர முன்வந்தபோதும் செல்லப்பெருந்தகை தலையீட்டால் கிடைக்கவில்லை என ஹசீனா சையத் கூறியுள்ளார்.