புதுக்கோட்டை,
மின்கம்பியில் உரசி வைக்கோல் லாரி தீப்பிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் பகுதியில் கருப்பூர் கிராமம் இருந்து வருகிறது. இந்த கிராமத்து வழியாக வைக்கோலை லாரி ஒன்று ஏற்றி சென்றது. அப்பகுதியில் சென்றுக் கொண்டிருந்தபோது திடீரென அங்குள்ள மின்கம்பத்தில் லாரி உரசியது. இதில், லாரியின் மேலிருந்த வைக்கோல் திடீரென தீப்பற்றியது. பின்னர், தீ மளமளவென பரவி லாரி முழுவதும் பரவியது.
இது குறித்து தகவல் அறிந்த ஆவுடையார் கோவில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர், அங்கு லாரியில் பற்றிய தீயை அணைக்க முற்பட்டனர். 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். லாரி முழுவதும் சேதமடைந்தது. லாரியில் தீப்பற்றியதும் லாரியில் உள்ளவர்கள் தப்பி சென்றதால் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல் வெளியானது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.