தமிழக செய்திகள்

சஷ்டி விரதம் கடைப்பிடிக்கும் முருக பக்தர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் - அண்ணாமலை

முருகப்பெருமானின் அருளால் நன்மைகள் பெருகி, அன்பும் அமைதியும் வளமும் நிறைந்திடட்டும் என அண்ணாமலை தெரிவித்தார்.

சென்னை,

2026-ஆம் ஆண்டிற்கான கந்த சஷ்டி திருவிழா நவம்பர் 10-ஆம் தேதி தொடங்கி, முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று (நவம்பர் 15, 2026) நடைபெறுகிறது. இந்த நிலையில், சஷ்டி விரதம் கடைப்பிடிக்கும் அனைத்து முருக பக்தர்களுக்கும் அண்ணாமலை வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை வாழ்த்து

இது தொடர்பாக, வி த லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

அறுபடை வீடுகளில் அருள்பாலிக்கும் முருகப்பெருமானை மனமுருகி வழிபட்டு, சஷ்டி விரதம் கடைப்பிடிக்கும் அனைத்து முருக பக்தர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

சஷ்டி விரதத்தின் நிறைவாக, இன்று நடைபெறும் சூரசம்ஹாரத் திருநாளிலும், நாளை நடைபெறவிருக்கும் திருக்கல்யாண வைபவத்திலும், முருகப்பெருமானின் அருளால் அனைவரது வாழ்விலும் தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகி, அன்பும் அமைதியும் வளமும் நிறைந்திடட்டும்.

வெற்றி வேல்! வீர வேல்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT