தமிழக செய்திகள்

தமிழக வெற்றிக்கழகத்திற்கு இதயம் கனிந்த வாழ்த்துகள்: ஏஆர் ரஹ்மான்

சென்னை நகரத்தை கலை மற்றும் செழிப்பு நிறைந்ததாக மாற்றும் பயணமாக உங்கள் பணி சிறக்கட்டும் என ஏஆர் ரஹ்மான் தெரிவித்தார்.

சென்னை,

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி தவெக 108, திமுக 74, அதிமுக 52 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன. அதிமுக, திமுக மாறி மாறி 2-ம் இடத்துக்கு போட்டாபோட்டி நிலவிய நிலையில் தற்போது திமுக 2-ம் இடத்தில் உள்ளது.

சட்டமன்ற தேர்தலில் முன்னிலை பெற்றுள்ள விஜய்க்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. அந்த வகையில், இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

அன்புள்ள விஜய் அவர்களுக்கு, ஊழலற்ற அரசியல், சமூக நீதி, சமத்துவம் ஆகியவற்றை முன்னிறுத்தி, தமிழ்நாட்டை முன்னணிக்கு கொண்டு செல்லும் சிறந்த தலைவராக நீங்கள் உயர, வளர வாழ்த்துகள். பிளவுகளை மறுக்கும் அரசியல் பண்பாட்டுடன், தமிழையும் தமிழரையும்கொண்டாடும்,

சென்னை நகரத்தை கலை மற்றும் செழிப்பு நிறைந்ததாக மாற்றும் பயணமாக உங்கள் பணி சிறக்கட்டும்!

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT