சென்னை,
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (16-07-2026) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் இன்று வெப்ப அலை வீசக்கூடும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மதுரை, விருதுநகர், திண்டுக்கல், கரூர், ஈரோடு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இன்று (16.07.2026) வெப்ப அலை வீசக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இன்று ஒரு சில பகுதிகளில் இயல்பை விட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் நாளை வெப்ப அலை வீசக்கூடும். இதன்படி கரூர், ஈரோடு, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் நாளை (17.07.2026) வெப்ப அலை வீசக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.