தமிழக செய்திகள்

கனமழை எதிரொலி: கோவையில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

திண்டுக்கல் மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை,

கனமழை காரணமாக கோவை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. தமிழகத்தில் இன்று பெருமாலான மாவாட்டங்களில் இன்று மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

கோவையில் கனமழை

இதனிடையே, கோவை மாவட்டத்தில் இன்று கனமழை வெளுத்து வாங்கியது. உக்கடம், காந்தி புரம், ஆர்.எஸ்.புரம், டவுன் ஹால், குனியமுத்தூர், சிங்காநல்லூர் உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. கனமழை நாளையும் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை

இந்நிலையில், கனமழை காரணமாக கோவையில் உள்ள பள்ளிகளுக்கு நாளை (26.10.2026 - திங்கட்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவித்து கோவை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கனமழை காரணமாக திண்டுக்கல் மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT