விஜய் 
தமிழக செய்திகள்

சென்னையில் கனமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல் அமைச்சர் விஜய் ஆய்வு

மழை, வெள்ளம் பாதித்த இடங்கள் குறித்து முதல் அமைச்சர் விஜய் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. குறிப்பாக சென்னையில் நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. கடந்த 24 மணி நேரத்தில் பாரிமுனையில் 36 செ.மீ. மழை பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், நகரின் பல்வேறு இடங்களும் நேற்று இரவு வெள்ளத்தில் மிதந்தன. எனினும், மாநகராட்சி ஊழியர்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு உடனடியாக வெள்ள நீரை வெளியேற்றும் பணிகள் நடைபெற்றன.

கனமழை எச்சரிக்கை

இதனால், நேற்று இரவு வெள்ளத்தில் மிதந்த பல சாலைகள் இன்று காலையில் இயல்பு நிலைக்குத் திரும்பின. இந்த நிலையில், இன்றும் சென்னைக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்கள் ஆய்வு

கனமழையை எதிர்கொள்ள தமிழக அரசு போதிய முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழை மற்றும் பேரிடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன் போன்றோர் ஆய்வு செய்து வருகிறார்கள்.

விஜய் வருகை

இந்த நிலையில், சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள கட்டுப்பாட்டு மையத்திற்கு முதல் அமைச்சர் விஜய் நேரில் வருகை தந்துள்ளார். மழை வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள், வெள்ள பாதிப்பு இடங்கள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களையும் வழங்குவார் என்று தெரிகிறது. சென்னையில் பருவமழை பதிப்பு பணிகளை கண்காணிக்க நியமனம் செய்யப்பட்ட பொறுப்பு அமைச்சர்களுடன் முதல் அமைச்சர் விஜய் ஆய்வு செய்ய உள்ளார்.

SCROLL FOR NEXT